TAMIL MIXER EDUCATION.ன்
புதுச்சேரி
செய்திகள்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 – புதுச்சேரி
புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர்
ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதி
தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி
வழங்காத நிலையில் துணைநிலை
ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
வழங்கியுள்ள நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று
மீண்டும் தொடங்கியது. காலை
9:45 மணிக்கு பேரவை கூடிய
நிலையில் 2022-2023ம்
நிதி ஆண்டிற்கான ரூபாய்
10 ஆயிரத்து 696 கோடிக்கான பட்ஜெட்டை
நிதித்துறை அமைச்சரும் ,முதல்வருமான ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
- கல்வித்துறையுடன் உள்ள
விளையாட்டு இளைஞர் நலத்துறை
தனித்துறையாக துவங்கப்படும் - ரூ.1596 கோடி
மின்துறைக்கு ஒதுக்கீடு - தீயணைப்பு துறைகளில்
காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். - தீயணைப்பு துறைக்கு
ரூ.31.5 கோடி ஒதுக்கீடு - புதுச்சேரி கடற்
பகுதியில் மிதக்கும் படகு
துறை அமைக்கப்படும் - 11 மற்றும் 12 ஆம்
மாணவர்களுக்கு இலவச
லேப்டாப் வழங்கப்படும் - சென்னை – புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல்
சேவை தொடங்க நடவடிக்கை
எடுக்கப்படும். - எந்தவிதமான அரசு
உதவி தொகையும் பெறாத
21 முதல் 57 வயது வரையிலான
வறுமைக்கோட்டிற்கு கீழ்
உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்
உதவி தொகை வழங்கப்படும். - அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழாண்டு
தொகுதி மேம்பாட்டு நிதி
ரூ.2 கோடியாக வழங்கப்படும். - காரைக்காலில் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும். - கோவில்களில் உள்ள
ஆவணங்கள் சொத்துக்களை டிஜிட்டல்
முறையில் பதிவேற்றம் செய்ய
நடவடிக்கை. - காரைக்காலில் இருந்து
இலங்கை காங்கிரஸ் துறைமுகத்திற்கு பயணிகள் சரக்கு கப்பல்
சேவை இயக்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow