இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயிலின் இண்டேன், பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ், இந்துஸ்தான் ப்ட்ரோலியத்தின் ஹெச்.பி கேஸ் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் டிஸ்ட்ரீபியூட்டர்கள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. அதனை மக்கள் கேஸ் ஏஜென்சி என பெரும்பாலும் அழைக்கின்றார்கள்.
இந்த கேஸ் ஏஜென்சி தொடங்க பல்வேறு விதிகள் உள்ளன. அதனை பூரித்துச் செய்யும் போது கேஸ் ஏஜென்சி தொடங்குவதற்கான உரிமம் கிடைக்கும். அவ்வப்போது இந்த நிறுவனங்கள் தங்களது டிஸ்ட்ரீபியூட்டர்களுக்கான விண்ணப்பங்களைப் பெறுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை:
இந்துஸ்தான் பெட்ரோலியம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது படி கேஸ் ஏஜென்சி தொடங்க விரும்புபவர்கள் இணையதளம் அல்லது ஆப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு சம்மந்தப்பட்ட நபர் தேர்வு செய்யப்பட்டால் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் அதற்கான அளவுருக்களின் படி தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் நேர்காணலுக்குப் பின் அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும். அதன் பின்னரே ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான பணிகள் நடைபெறும்.
ஆய்வு:
ஆவணங்கள் ஆய்வு செய்த பிறகு, நேரடியாக கேஸ் ஏஜென்சி அமைக்கப்பட உள்ள இடம், சேமிப்பு கிடங்கு அமைக்க உள்ள இடங்களை சம்மந்தப்பட்ட நிறுவனம் ஆய்வு செய்யும். கேஸ் குடோவுன் சொந்தமாகக் கட்ட வேண்டும். அதற்கு சொந்த இடம் இல்லை என்றால் 15 ஆண்டுகள் குத்தகைக்கு இடத்தை பெற்று இருக்க வேண்டும்.
யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்?
50 சதவீத விண்ணப்பங்கள் இட ஓதுக்கீடு அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடும் உண்டு. விதிகளின்படி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப் படை வீரர்கள், காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள், சமூக மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
எல்பிஜி விநியோகத்திற்கான விண்ணப்பங்கள் செய்தித்தாள்களில் அறிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான தகவல்கள் https://www.lpgvitarakchayan.in என்ற போர்ட்டலிலும் கிடைக்கும்.
Full Details PDF: Download Here
ஒரு சிலிண்டர் விற்றால் எவ்வளவு வருமாணம் கிடைக்கும்?
கேஸ் ஏஜென்சிகள் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை விற்றால் குறைந்தது 61 ரூபாய் 84 காசுகள் கமிஷனாக பெறுவார்கள். 5 கிலோ சிலிண்டர் என்றால் 30 ரூபாய் 9 பைசா கமிஷனாக கிடைக்கும்.
எவ்வளவு செலவாகும்?
நகரம், புறநகர் பகுதிகளில் கேஸ் ஏஜென்சி தொடங்க குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். கிராமப்புற பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.