Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பொதுவாக
நமக்குத் தெரிந்து ரத்ததானம்,
கண்தானம் இந்த இரண்டு
வித தானங்கள் தான்
அதிக அளவில் இருந்து
வருகின்றன.
உடல்
உறுப்புகளின் தானம்
இரண்டு வகைப்படும். முதலாவது,
ஒருவர் உயிருடன் இருக்கும்
போது தருவது. இரண்டாவது,
ஒருவர் இறந்த பின்னர்
தருவது.
1.உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு
சிறுநீரகம், ஈரலின் ஒரு
பகுதி, நுரையீரலின் ஒரு
பகுதி, குடலின் ஒரு
பகுதி, கணையத்தின் ஒரு
பகுதி, ரத்தம் ஆகியவை.
2.இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு
சிறுநீரகங்கள், கணையம்,
கல்லீரல், சுரையீரல், குடல்
முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல
ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று
நோய், இதய நோய்,
பால்வினை நோய், ஹெபடைடீஸ்
நோய் போன்ற வியாதிகள்
எதுவும் இல்லாதவர்கள் அனைவரும்
உயிருடன் இருக்கும் போது
தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு?
18 வயது
முதல் 60 வயது வரையில்
உள்ளவர்கள், அது ஆணாக
இருந்தாலும் சரி அல்லது
பெண்ணாக இருந்தாலும் சரி
தாமாக முன் வந்து
தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள்?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு
தானம் செய்யலாம். என்றாலும்
அதற்கென்று சில விதி
முறைகள் உள்ளன. 1954-ம்
ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:
நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர்,
18 வயதிற்கு மேற்பட்ட மகன்,
மகள், மாமா, அத்தை,
சித்தப்பா, அவர்களுடைய மகன்,
மகள் போன்ற நெருங்கிய
சொந்தங்கள் உடல் உறுப்பு
தானம் செய்யலாம்.
ரத்த
சம்பந்தம் இல்லாத ஆனால்
நெருங்கிய நண்பர்கள், மனைவி,
மாமனார், மாமியார், கூட
வேலை செய்பவர்கள், பக்கத்து
வீட்டிலுள்ளவர்கள் போன்ற
நெருக்கமானவர்களும் தரலாம்.
சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள்
காத்திருக்கின்றனர் என்று
வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன்
வருபவர்களின் உடல்
உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக்
கொள்ளலாம்.
தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே
நம் உடம்பிற்கு ஒரு
இயல்பு உண்டு, தன்
உடம்பை சேராத எதையும்
அது ஏற்றுக் கொள்ளாமல்,
நிராகரித்து விடும். இதற்கு
ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக
பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ‘ப்ளாஸ்மா பெரிஸிஸ்‘
என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு
அறுவை சிகிச்சையின் போது,
கூடவே மண்ரலையும்
எடுத்து விடுவார்கள். இதனால்
பொருத்தப்பட்ட உறுப்பு
நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக,
தானம் செய்கின்றவர்களுக்கு எந்த
பாதிப்பும் வருவதில்லை. இரண்டு
சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்
போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை
ஒரு உறுப்பு செய்வதால்,
அதனுடைய அளவு சிறிது
பெரியதாக ஆகும், ஆனால்
நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன்
வேலையை, தானாகவே செய்து
கொள்ளலாம், பாதிப்பு இருக்காது.
கல்லீரலின் ஒரு பகுதியை
தானம் செய்த பின்,
தானாகவே மறுபடியும் வளர்ந்து
விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே
எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள்
சீராக வேலை செய்ய
தடை இல்லை. ரத்ததானம்
செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர்
அளவுதான் ஒரு சமயத்தில்
எடுப்பார்கள். அதுவும்
இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி
விடும்.
ஆனால்
ரத்ததானம் செய்ய முன்
வருபவர்கள், மஞ்சள் காமாலை
நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில்
சாப்பிட்டிருக்கக் கூடாது,
எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல்
ரத்த அழுத்தம் உயர்
ரத்த அழுத்தமாகவோ அல்லது
குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த
சோகை இருக்கக்கூடாது, குறைந்தது
மூன்று மாதங்களுக்குள் ரத்தானம்
செய்திருக்கக் கூடாது.
மற்ற அனைவரும் ரத்ததானம்
செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின்
விழித்திரை (கார்னியா) எலும்பு,
எலும்பின் மஜ்ஜை (போன்
மாரோ), ரத்த நாளங்கள்,
தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல்,
நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான
உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும்.
ஒரு மனிதன், பத்து
பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.
ஒருவரின்
இதயத் துடிப்பு நின்று
விட்டாலோ அல்லது னரையீரல்
வேலை செய்யாமல் இருந்தாலோ
(கார்டியோ பல்மோனரி பெயிலியர்),
அல்லது மூளை செயல்
இழந்து போய், இருதயம்
மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம்
பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான
உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக
இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல்
உறுப்புக்களான, இதயம்,
கல்லீரல், னரையீரல் போன்றவை,
மூளைச்சாவு, அதாவது மூளை
செயல் இழந்து, உயிர்
மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால்
மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு – சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின்
சுவாசம் நின்றவுடன் ஐந்து
அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல்
இழந்து போகின்றன. மூன்றாவது
நிமிடத்தில் மூளை வெகுவாக
பாதிக்கப்படுகிறது. பத்தாவது
நிமிடத்தில் இன்னும் அதிகமான
மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க
வைக்க முடியாது. சுவாசம்
நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு
ஒருவரை பிழைக்க வைக்க
முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த,
பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த
உறுப்புகளுக்கு செலுத்தி,
அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து
போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான
ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம்.
எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம்
செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி
நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும்.
ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கலவைகள்
உள்ளன. அவை ‘வயாஸ்பான்
திரவம்‘, ‘யுரோ கால்லின்ஸ்” திரவம், ‘கஸ்டோயியல்‘ திரவம் போன்று இன்னும்
சில ரசாயன கலவைகள்
உள்ளன. சிறுநீரகம், இதயம்
போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட,
மிக மிக குறைந்த
குளிர்ந்த நிலையில் வைத்தாலே
போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே
உள்ள ஆதாரங்களின்படி 1902-ம்
வருடம் முதன் முதலாக
‘அலெக்ஸில்‘ கர்ல் என்ற
அறிஞர்தான் முதல் முதலாக
ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை
சிகிச்சை முறைக்கு வழி
வகுத்தார்.
1905-ம்
வருடம் டிசம்பர் மாதம்,
டாக்டர் எட்வர்ட் ஸிம்
என்பவர் முதன் முதலாக
கார்னியா கண் அறுவை
சிகிச்சை செய்தார்.
1918-ம்
ஆண்டு, முதல் உலகப்
போரின் போது தான்
ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம்
ஆண்டுதான், அமெரிக்காவின் ‘பாஸ்டன்‘
நகரில் டாக்டர். ஜான்
முர்ரே, முதல் சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை
செய்தார்.
1954-ம்
ஆண்டு பீட்டர் பென்ட்
மருத்துவமனையில், ரிச்சர்ட்,
ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம்
ஆண்டு – ஐரோப்பாவின் முதல்
சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல்
உட்ரோப் செய்தார்.
196-ம்
ஆண்டு ‘கொலராடோ‘விலுள்ள
டென்வர் என்ற இடத்தில்
முதல் முதலாக கல்லீரல்
மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.
1965-ம்
ஆண்டு தான் முதன்
முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம்
ஆண்டு டிசம்பர் 3-ந்
தேதி, தென் ஆப்பிரிக்காவின் ‘கேப்டவுன்‘ நகரில் டாக்டர்
கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன்
முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய
மாற்று அறுவை சிகிச்சை
செய்தார். ‘டென்னிஸ் டார்வெல்‘
என்பவரின் இதயத்தை ‘லூயிஸ்
வாஷ்கேன்ஸ்க்கி‘ என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம்
ஆண்டு ஐரோப்பாவில் முதல்
இதய மாற்று அறுவை
சிகிச்சை நடைபெற்றது.
1981-ல்
முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று
அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம்
ஆண்டு ‘சர். மாக்டியா
கூப்‘ என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில்
மாற்றி அறுவை சிகிச்சை
செய்தார்.
1986-ம்
ஆண்டு நுரையீரல் மட்டும்
எடுத்து மாற்று அறுவை
சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம்
ஆண்டு முதன் முதலாக,
உயிருடன் உள்ள ஒருவர்
தன் கல்லீரலை தானமாக
தந்தார்.
2001-ம்
ஆண்டு, ஸ்வீடன் நாட்டின்
டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன்,
இதய துடிப்பு நின்ற
பின்னர் நுரையீரலை எடுத்து
மாற்று அறுவை சிகிச்சை
செய்தார்.
2005-ம்
ஆண்டு முதன் முதலாக
முகத்தின் ஒரு சில
பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை
சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற
மனித உறுப்புகளின் மாற்று
அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு
நீரகம் – 72 மணி நேரம்
வரை
கல்லீரல்
– 18 மணி நேரம் வரை
இதயம்
– 5 மணி நேரம் வரை
இதயம்
/ நுரையீரல் – 5 மணி நேரம்
வரை
கணையம்
– 20 மணி நேரம் வரை
கண்
விழித்திரை (கார்னியா) – 10 நாட்கள்
வரை
எலும்பு
மஜ்ஜை – கால அளவு
மாறும்
தோல்
– 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு
– 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின்
வால்வுகள் – 5 வருடம், அதற்கு
மேலும் பொ,துவாக,
பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக,
பிறந்து, வாழ்ந்து, இறந்த
பின்னரும் நாம் தொடர்ந்து
இந்த உலகத்தில் பலரின்
உடம்பின் மூலம் இந்த
உலகத்தில் வாழலாம். ஆகவே,
இறந்த பின்னரும் இந்த
உலகில் வாழ நாம்
செய்ய வேண்டியது, நினைவு
உள்ள போதே நம்
உடல் உறுப்புக்களை தானம்
செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள
அட்டையை வாங்கி வைத்துக்
கொண்டால், நாம் நிச்சயமாக
இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.
உடல் உறுப்பு தானம் செய்ய
தமிழ்நாடு அரசின் https://tnos.org/DonorCard.aspx
இணைதளத்தில் பதிவு செய்து
கொள்ளலாம்.
Check Related Post:
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |