குழந்தைகள் தினவிழாவையொட்டி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடக்க உள்ளது.
இது குறித்து அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் கூறும்போது, ‘‘தேசிய குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியத்தில் சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்படுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
மரம் நடுதல், செடிகள், தோட்டம் அமைத்தல், மழைநீர் சேமித்தலை குறிப்பிடும் பூந்தோட்டம், மாவட்டத்திலுள்ள மன்னார் வளைகுடா கடலில் வாழும் அரியவகை உயிரினங்களை பாதுகாத்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த கடல்வாழ் உயிரினங்கள். கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியங்கள் வரவேற்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பூந்தோட்டம், 4 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கடல்வாழ் உயிரினங்கள், 7 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை வரையலாம்.
கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி மாணவர்கள் வீட்டில் ஏ4 சைஸ் வெள்ளை வரைப்பட பேப்பரில் வரைய வேண்டும். மாணவர்கள் படைப்புகளை காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், ஜவான்பவன் முதல்தளம், தேவிப்பட்டிணம் ரோடு, கேணிக்கரை என்ற முகவரிக்கு வரும் 28ம் தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.
மாணவர்கள் தங்களின் படைப்புகளின் பின்புறம் பெயர், வகுப்பு, முகவரி, செல் நம்பர் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு நவ.30ம் தேதி அருங்காட்சியகத்தில் நடக்கும் பாராட்டு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் இ.சான்றிதழ் அனுப்பப்படும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98436 57801 என்ற செல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்