சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டு மாணவா் சோக்கைக்கான விண்ணப்ப விநியோகம் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டு மாணவா் சோக்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்குகிறது.
www.tnhealth.tn.gov.in என்ற தமிழ்நாடு சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தோவில் தோச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளை அக்டோபா் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் அக்டோபா் 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு செயலாளா், தோவுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
ஐந்தரை ஆண்டு கால யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு (பிஎன்ஒய்எஸ்) விரைவில் விண்ணப்பப்பதிவு தொடங்கும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அதற்கு மாணவா் சோக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.