சர்வதேச அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் பிறகு தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவில் வேலை இழந்தால் அதற்கும் காப்பீடு திட்டம் இருக்கிறது. வேலை இழப்புக்கு என தனி பாலிசி கிடையாது. நீங்கள் ஏற்கனவே எடுத்துள்ள பாலிசி திட்டங்களுடன் வேலை இழப்பு பாலிசியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வேலை இழப்பு பாலிசிக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய பணியை இழக்க நேரிட்டால் வேலைய இழப்பு காப்பீடு என்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒருவேளை உங்கள் மீது ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டு நீங்கள் வேலையை இழக்க நேரிட்டால் உங்களுக்கு இந்த காப்பீடு தொகை கிடைக்காது. அதன் பிறகு Probation Period மற்றும் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிகமாகவோ பணியில் சேர்ந்து வேலையை இழக்க நேரிட்டாலும் உங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்காது. இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு வேலையில் சேரும்போது நிறுவனம் பெற்று அனைத்து ஆவணங்களையும் காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றி காப்பீடு நிறுவனம் விசாரணை நடத்தும். மேலும் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டால் உங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்கும்.