கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையிலான செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையிலான செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் பழ்ஹன்ம்ஹ இஹழ்ங் பிரிவில் பழ்ஹன்ம்ஹ பதிவுகளை மேற்கொள்ள 11 மாத காலத்துக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள இரண்டு செவிலியா் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபா்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து வருகிற 03.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் ‘இணை இயக்குநா், நலப் பணிகள்’ அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவித்தாா்.