வீட்டிலேயே மாஸ்க்
செய்து
விற்கலாம்
– இல்லத்தரசிகளுக்கு ஒரு
அறிய
சுயதொழில்
ஐடியா
மாஸ்க் செய்ய தேவையானவை:
காட்டன்
துணி – கால் மீட்டர்
Fabric Glue
Scissor
Scale
Pencil
Step – 1: மாஸ்க்கின் மூக்கு
மற்றும் வாய் பகுதிக்கு
12 செ.மீ நீளம்,
8 செ.மீ அகலம்
என காட்டன் துணியில்
பென்சிலால் குறித்துக் கொள்ளவும்.
காதுப் பகுதியில் வரும்
வளையம் போன்ற பகுதி
தயார் செய்ய 12 செ.மீ
நீளம், 4 செ.மீ
அகலத்தில் தனியாக இரண்டு
இடத்தில் குறித்துக்கொள்ளவும்.
Step – 2: காட்டன் துணியில்
பென்சிலால் குறித்துள்ள இடத்தைத்
தனியே கத்தரித்து எடுத்துக்கொள்ளவும்.
Step – 3: மூக்கு மற்றும்
வாய் பகுதிகளுக்கு எனக்
கத்தரித்து எடுத்துள்ள பகுதி
யைப் படத்தில் காட்டியுள்ளபடி கீழிலிருந்து மேலாக
ஃப்ரில் போன்று மடிக்கவும்.
Step – 4: ஒவ்வொரு மடிப்பிலும் பசை தடவி, அதற்கு
மேல் பகுதியுள்ள துணியுடன்
சேர்த்து ஒட்டி சில
நிமிடங்கள் உலரவிடவும்.
Step – 5: மாஸ்க்கின் மேல்
பகுதி மற்றும் கீழ்
பகுதியில் இருந்து நூல்
பிரிந்து வராமல் இருக்க,
துணியைப் பின்புறமாக மடித்து
ஒட்டிக்கொள்ளவும். மாஸ்க்கின் பேஸ் தயார்.
Step – 6: காது பகுதிகளுக்கென வெட்டி யிருக்கும் துணியைப்
பக்கவாட்டில் இரண்டாக
மடித்து, மாஸ்கின் பேஸை
நடுவில்வைத்து படத்தில்
காட்டியுள்ளபடி இரண்டு
புறமும் ஒட்டிக்கொள்ளவும்.
Step – 7: மாஸ்க்கின் பேஸூடன்
ஓட்டப்பட்டுள்ள காதுப்
பகுதியின் நீளமான பகுதியைக்
கீழிருந்து மேலாக வளையம்
போன்று மடித்து மாஸ்க்கின் பேஸுடன் ஓட்டவும். காதுகளில்
மாட்ட துணி வேண்டாம்
என நினைப்பவர்கள் ரப்பர்
பேண்ட் அல்லது எலாஸ்டிக்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
Step – 8: 10 நிமிடங்கள் உலரவைத்து
பயன்படுத்துங்கள். இது
பெரியவர் களுக்கான அளவு.
சிறிய குழந்தைகள் எனில்
6 செ.மீ நீளம்,
4 செ.மீ அளவுள்ள
காட்டன் துணியில் செய்யலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.