தமிழகத்தில்எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான மாணவர்களின் பெயர்ப்பட்டியல், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுஆகியவை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17ம் தேதி) வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தின்(என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காகஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம்தமிழகத்தில் 6695 பேர் உள்பட நாடுமுழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள்தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9ம் வகுப்பு முதல்பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 26ம் தேதியில் துவங்கி பிப்ரவரி 7ம் தேதியுடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில்தேர்வு எழுத தகுதிபெற்ற மாணவர்கள்பெயர்ப் பட்டியல் மற்றும் தேர் வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (https://dge1.tn.gov.in/) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்துபள்ளித் தலைமையாசிரியர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குவதுடன், அவர்கள் தேர்வு எழுத உள்ள மையத்தின்விவரங்களையும் எடுத்துரைக்க வேண்டும் என தேர்வுத் துறைசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.