தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தேனி மாவட்டம் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது இதற்கான முழு விவரம் பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. நீச்சல் பயிற்சி முகாம் :-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 20.04.2022 முதல் 29.06.2022 வரையிலான காலங்களில் நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,200/- (18% GST) ஆகும்.
இத்தொகையினை phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின்கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருத்தல் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் 20.04.2022 முதல் 29.06.2022 வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் முகமானது ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், முகாம் நடைபெறும் காலங்களில் இடைப்பட்ட நாட்களான அனைத்து திங்கட்கிழமை, தொழிலாளர் தினம், போன்ற நாட்களில் முகாமுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது
தினசரி நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நேரம் காலை வேளையில் 07.30 A.M. to 09. 30 A.M. வரையிலும் காலை வேளையில் பெண்களுக்கு என்று தனியாக 10.30 to 11.30 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மாலை வேளையில் 02.30 to 04.30 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 12 நாட்களுக்கு ஒரு வேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கான தொகை ரூ.1,200 (18% GST) யை phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் செலுத்திட வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அரங்கம் – 04546-253090 தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் – 7401703505, நீச்சல் பயிற்றுநர் – 9994944166 ஆகிய கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.