சிவகங்கை தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் 2 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவக்கப்படுகிறது.சிவகங்கை திருப்புத்துார் ரோட்டில் உள்ள இப்படிப்பு மையத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் bit.ly/tnpscclass என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரத்திற்கு 04575 – 245 225 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.போட்டி தேர்வுக்கான நுாலகத்தையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.