தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் I, II, IV, VII, VIII மற்றும் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பல்வேறு போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக திரு நடராஜன் மற்றும் செயலாளராக திரு உதயசந்திரன் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் டிஎன்பிஎஸ்சி பழைய புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. தேர்வுக்கான ஆண்டு அட்டவணை நேர்முகத் தேர்வு வீடியோ பதிவு ஆன்லைன் தேர்வு முறை ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை கவுன்சிலிங் முறை மதிப்பெண் வெளியீடு முறை மொத்த தொகுதி மற்றும் இனவாரியான தகுதி நிலைகள் உள்ளிட்ட மாற்றங்களை டி என் பி எஸ் சி தற்போது சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால் ஏற்கனவே கொள்கை ரீதியாக அறிவிக்கப்பட்டிருந்தபடி போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் விடைத்தாள் நகல்கள் வழங்கும் முறை இதுவரை பின்பற்றப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் விடைத்தாள் நகல்கள் வழங்கும் முறையினை பின்பற்றுகிறது என்பது அனைவரும் அறிந்ததே டிஎன்பிஎஸ்சியும் டிஆர்பி போல பின்பற்ற முன் வர வேண்டும். உதாரணமாக தேர்வு எழுதும் பல மாணவர்கள் விடையளிக்கும் போது 150 வினாக்களுக்கு விடையளித்ததாகவும் ஆனால் முடிவுகள் வரும் போது டிஎன்பிஎஸ்சி வெளியிடும் மதிப்பெண் பட்டியலில் தங்களின் மதிப்பெண் குறைவாக உள்ளதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே இதுபோன்ற புகார்களை தவிர்க்க டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத்தன்மையாக செயல்படுவதால் மாணவர்களின் விடைத்தாள் நகல்களை வழங்க முன் வர வேண்டும். டிஆர்பி போல விடைத்தாள்கள் வழங்கினால் மாணவர்கள் தங்களது நிலைகளை அறிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வசதியாக இருக்கும் எனவே இதனை பரிசீலனை செய்யுமாறு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்.- இயக்குனர் P. இராமமூர்த்தி