Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பத்தாம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை (Merit Scholarships For Single Girl Child) வழங்கப்படும் என் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி டிசம்பர். 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர். 28 ஆகும். பத்தாம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள்.
எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக்கட்டணம் ரூ. 1500/-க்கு ம்மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித்தொகைகுத் தகுதியானவர்கள்.
பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தகவல் பெற cbse.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
harini