மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான lsquo;மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ‘மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி-யுஜி)’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை இரவு முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க மாா்ச் 12 கடைசியாகும். இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சியுஇடி-யுஜி தேர்வு வரும் மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு மாா்ச் 12-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். https://cuet.samarth.ac.in/
இந்த தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விவரம் ஏப்ரல் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும். தேர்வறை நுழைவுச் சீட்டை இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வலைதளத்திலிருந்து மே இரண்டாவது வாரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு நாள்களில் 3 பகுதிகளாக தேர்வு நடத்தப்படும் என்று அவா் கூறினாா். யுஜிசி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவா் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையில் அல்லாமல், சியுஇடி நுழைவுத் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.