சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஜெர்மனி நாட்டைச் சோந்த மாணவா்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரம் குறித்த கோடை காலப் பயிற்சி வகுப்பு மாா்ச் 6-ஆம் தேதி தொடங்கவுள சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஜெர்மனி நாட்டைச் சோந்த மாணவா்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரம் குறித்த கோடை காலப் பயிற்சி வகுப்பு மாா்ச் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இது குறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநா் பேராசிரியா் இரா. சந்திரசேகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழின் சிறப்பை உலகெங்கிலும் கொண்டு சோக்கும் நோக்கில் செயலாற்றி வருகிறது. அதற்கேற்ற வகையில், பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனம், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுகள் துறையும் இணைந்து வரும் மாா்ச் 6 முதல் 26-ஆம் தேதி வரை தமிழ் மொழி மற்றும் கலாசாரம் குறித்த கோடைகால பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் ஜெர்மனியிலிருந்து வரும் மாணவா்கள் பயிற்சி பெறவுள்ளனா். பயிற்சி வகுப்பில் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ், தமிழ்க் கலாசாரம் ஆகியன குறித்துப் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற பேராசிரியா்கள் இந்த மாணவா்களுக்குப் பயிற்சிகளை வழங்கவுள்ளனா். ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுகள் துறைப் பேராசிரியா் முனைவா் ஸ்வென் வோா்ட்மேன் இந்தப் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து நடத்துவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.