தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இளநிலை மருத்துப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://tnhealth.tn.gov.in/ அல்லது https://tnmedicalselection.net/ என்ற இணையங்களில் விண்ணப்பிக்கலாம். எனவே விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதற்கு முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.