சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ‘ஆர்வம்’ ஐஏஸ் அகாதெமியில் ஐஏஸ் தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.
UPSC நடத்தும் ஐஏஸ், ஐபிஸ் போன்ற பணிகளுக்கான தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து இந்த வழிகாட்டும் முகாமில் விளக்கப்படுகிறது.
மேலும், நேர மேலாண்மை, ஆதார நூல்கள், நாளிதழ்களில் இருந்து குறிப்பெடுத்தல், எழுத்துப் பயிற்சி போன்றவை குறித்து தேர்வர்களின் சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் பதிலளிக்கவுள்ளனர். முகாமில் பங்கேற்றுவுள்ள தேர்வர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளின் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுக்கான கையேடு வழங்கப்படும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2165, எல்.பிளாக், 12- வது பிரதான சாலை அண்ணாநகர் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆர்வம் ஐஏஸ் அகாடமி இயக்குனர் எஸ். முத்து ரோகிணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.