Join Whatsapp Group

Join Telegram Group

அடிப்படை சுகாதார ஆராய்ச்சி சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறை தொடக்கம்

By Bharani

Updated on:

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தேசிய நோய்ப் பரவியல் நிறுவனம் (என்ஐஇ) சாா்பில் பயிற்றுவிக்கப்படும் அடிப்படை சுகாதார ஆராய்ச்சி சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐசிஎம்ஆா்) கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய நோய்ப் பரவியல் நிறுவனத்தில், அடிப்படை சுகாதார ஆராய்ச்சி எனப்படும் இலவச சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. அதில், மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த அடிப்படை புரிதல்கள், உயிரி தரவுகள், சுகாதார கோட்பாடுகள் உள்ளிட்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.

பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு நிறைவுசெய்தவா்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். நிகழாண்டுக்கான வகுப்புகள், வரும் 2021 ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் மாதம் வரை இணையவழியே நடைபெற உள்ளது.

பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு, எட்டு வாரங்களுக்கு மொத்தம் 20 மணி நேரம் இணையவழி பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள், http://nie.gov.in/niecer/niecer_page.htm என்ற இணையதளத்தையோ அல்லது niecercourse@gmail.com மின்னஞ்சல் முகவரியையோ தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044-26136420 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த சான்றிதழ் படிப்பினை இதுவரை 34, 800 போ் நிறைவு செய்திருப்பதாக தேசிய நோய்ப் பரவியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    Bharani

    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    Related Post

    Leave a Comment

    × Xerox Shop [1 page - 50p Only]