மத்திய
அரசு பணிக்கு அடுத்தாண்டு முதல் ஆன்லைன் தேர்வு
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் கூறியதாவது: மத்திய
அரசு பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பொது
தகுதி தேர்வு, அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்பட
உள்ளது. இதற்கான தேர்வை
நடத்துவதற்கு தேசிய
தேர்வு முகமைக்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆன்லைன் பொது தகுதி தேர்வை தேசிய தேர்வு முகமையே நடத்தி குரூப் B மற்றும் C.க்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொலை தூரத்தில் இருந்து வருபவர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆன்லைன் தேர்வு முறையினால் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பயனடைவார்கள்.