ஆதாரில் மொபைல்
எண்ணை மாற்ற/ சேர்க்க
ஆவணங்கள் தேவையில்லை
ஆதார்
கார்டில் மொபைல் எண்ணை
மாற்றவே அல்லது சேர்க்கவே
எந்த ஆவணமும் தேவையில்லை என UIDAI தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தனிநபர்
அடையாள அட்டையாக விளங்கும்
ஆதார் கார்டுகள் மத்திய
மாநில அரசின் அனைத்து
வித நலத்திட்ட உதவிகளைப்
பெற கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.
வங்கிக்
கணக்கு தொடங்குவதற்கும், புதிய
மொபைல் எண் பெறுவதற்கும், பான் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை அவசியமாக
உள்ளது. உங்களது பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்
ஆதாரில் இணைக்கப்படாவிட்டால், நீங்கள்
ஆதார் எண்ணை சரிபார்க்கவும் முடியாது.
ஆதார்
எண்ணில் மொபைல் எண்ணை
இணைப்பது மிக எளிதான
ஒன்றுதான். அருகிலுள்ள ஆதார்
சேவா கேந்திரா மையங்களுக்கு சென்றும் இணைக்க முடியும்.
மேலும்
உங்கள் ஆதார் அட்டையில்
சில திருத்தங்களை வாடிக்கையாளர்களே ஆன்லைனில் செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ள நிலையில், சில திருத்தங்கள் ஆதார் மையத்திற்கு சென்று
திருத்தம் செய்ய வேண்டிய
நிலை உள்ளது. அப்படி
ஆதார் மையத்திற்கு செல்லும்
நேரத்தில் ஒரு சில
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய
கட்டாயம் உள்ளது.
இந்த
நிலையில் உங்கள் ஆதார்
அட்டையில் மொபைல் எண்ணைப்
புதுப்பிக்க, எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என UIDAI அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அந்த
ட்விட்டில்:
ஆதாரில்
மொபைல் எண்ணை சேர்ப்பதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. மொபைல் எண்–ஐ
சேர்க்க / புதுப்பிக்க அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு உங்கள்
ஆதார் கார்டை மட்டும்
எடுத்துச் செல்லுங்கள்.