தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
விருது குறித்தத் தகவல்
பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை |
---|---|
நிறுவியது | 1969 |
முதலில் வழங்கப்பட்டது | 1969 |
மொத்தம் வழங்கப்பட்டவை | 41 |
வழங்கப்பட்டது | இந்திய அரசு |
நிதிப் பரிசு | ₹ 1,000,000 |
விவரம் | வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும் |
முதல் வெற்றியாளர்(கள்) | தேவிகா ராணி (1969) |
கடைசி வெற்றியாளர்(கள்) | ரஜினிகாந்த்(2019) |
வருடம் | விருது பெற்றவர் | தொழில் | புகைப்படம் |
---|---|---|---|
1969 | தேவிகா ராணி | நடிகை | |
1970 | பி.என். சர்க்கார் | தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1971 | பிரித்விராஜ் கபூர் | நடிகர் (மறைவிற்குப் பின்னர்) | |
1972 | பங்கஜ் மல்லிக் | இசையமைப்பாளர் | |
1973 | சுலோச்சனா | நடிகை | |
1974 | வி. என். ரெட்டி | இயக்குநர் (திரைப்படம்) | |
1975 | திரேன் கங்குலி | நடிகர், இயக்குநர் (திரைப்படம்) | |
1976 | கானன் தேவி | நடிகை | |
1977 | நிதின் போஸ் | படத்தொகுப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), திரைக் கதையாசிரியர் | |
1978 | ஆர். சி. போரல் | இசையமைப்பாளர், இயக்குநர் (திரைப்படம்) | |
1979 | சோரப் மோடி | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1980 | ஜெய்ராஜ் | நடிகர், இயக்குநர் (திரைப்படம்) | |
1981 | நௌஷத் | இசையமைப்பாளர் | |
1982 | எல். வி. பிரசாத் | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1983 | துர்கா கோடே | நடிகை | |
1984 | சத்யஜித் ராய் | இயக்குநர் (திரைப்படம்) | |
1985 | வி. சாந்தாராம் | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1986 | பி. நாகி ரெட்டி | தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1987 | ராஜ் கபூர் | நடிகர், இயக்குநர் (திரைப்படம்) | 100px |
1988 | அசோக் குமார் | நடிகர் | |
1989 | லதா மங்கேஷ்கர் | பின்னணிப் பாடகர் | |
1990 | ஏ. நாகேசுவர ராவ் | நடிகர் | |
1991 | பல்ஜி பென்தர்கர் | இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர் | |
1992 | பூபேன் அசாரிகா | இயக்குநர் (திரைப்படம்) | |
1993 | மஜ்ரூ சுல்தான்புரி | பாடலாசிரியர் | |
1994 | திலிப் குமார் | நடிகர் | |
1995 | ராஜ் குமார் | நடிகர், பின்னணிப் பாடகர் | |
1996 | சிவாஜி கணேசன் | நடிகர் | |
1997 | பிரதீப் | பாடலாசிரியர் | |
1998 | பி. ஆர். சோப்ரா | இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
1999 | ரிஷிகேஷ் முகர்ஜி | இயக்குநர் (திரைப்படம்) | |
2000 | ஆஷா போஸ்லே | பின்னணிப் பாடகர் | |
2001 | யாஷ் சோப்ரா | இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
2002 | தேவ் ஆனந்த் | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) | |
2003 | மிரிணாள் சென் | இயக்குநர் (திரைப்படம்) | |
2004 | அடூர் கோபாலகிருஷ்ணன் | இயக்குநர் (திரைப்படம்) | |
2005 | சியாம் பெனகல் | இயக்குநர் (திரைப்படம்) | |
2006 | தப்பன் சின்கா | இயக்குநர் (திரைப்படம்) | |
2007 | மன்னா தே | பின்னணிப் பாடகர் | |
2008 | வி. கே. மூர்த்தி | படத்தொகுப்பாளர் | |
2009 | டி. ராமா நாயுடு | தயாரிப்பாளர் (திரைப்படம்), இயக்குநர் (திரைப்படம்) | |
2010 | கைலாசம் பாலச்சந்தர் | இயக்குநர் (திரைப்படம்) | |
2011 | சௌமித்திர சாட்டர்ஜி | நடிகர் | |
2012 | பிரான் கிரிஷன் சிகந்த் | நடிகர் | |
2013 | குல்சார் | பாடலாசிரியர் | |
2016 | கே. விஸ்வநாத் | இயக்குநர் | |
2017 | வினோத் கண்ணா | நடிகர் | |
2018 | அமிதாப் பச்சன் | நடிகர் | |
2019 | ரஜினிகாந்த் | திரைபட நடிகர் |