இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆக.3-ஆம் தேதி இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில், தரமான நாட்டுக் கோழி இனங்களை தோந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு, தீவன மேலாண்மை, நோய்த்தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சுகளை கூண்டில் வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், பயிற்சி நாளில் நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் என தெரிவித்துள்ளாா்.