TAMIL
MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
இம்மாத இறுதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவுகளும், அக்டோபர்
மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்
குரூப்
2/2ஏ முதல்நிலை எழுத்துத்
தேர்வு முடிவுற்று மூன்று
மாதங்கள் முடிவடைந்த நிலையில்,
தேர்வு முடிவுகள் குறித்த
எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால்,
தேர்வெழுதிய லட்சக்கணக்கான மன
உளைச்சலில் இருந்து வந்தனர்.
TNPSC
ஆள் சேர்க்கையில் பெண்களுக்கு அளிக்கப்பட இடஒதுக்கீடு தொடர்பான
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து
வருகிறது. தீர்ப்பு வெளியான
பிறகு, தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பல்வேறு அரசுப் பணி
சேர்க்கைக்கான எழுத்துத்
தேர்வு முடிவுகள் தொடர்பான
முக்கிய அறிவிப்பை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,
நடந்து முடிந்த TNPSC குரூப் 2, 2ஏ
முதல்நிலை எழுத்துத் தேர்வு
முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும்,
அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.