TAMIL MIXER EDUCATION.ன் தமிழக
செய்திகள்
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர்
திருக்கோவில் சார்பில் ஏழை
ஜோடிகளுக்கு
இலவச
திருமணம்: விண்ணப்பிக்க
அழைப்பு
பவானி: இந்து சமய அறநிலையத்துறை
சார்பில்,
பவானி
கூடுதுறை
சங்கமேஸ்வரர்
திருக்கோவில்
சார்பில்,
வரும்
டிச.,4ம் தேதி, ஐந்து ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள், கோவில் அலுவலகத்தை அணுகி, பெயர்களை பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஜோடிகளுக்கும்
தலா
இரண்டு
கிராம்
தங்கத்தில்
தாலி,
மணமகன்
மற்றும்
மணமகளுக்கு
உடை
செலவு,
இரு
தரப்பு
வீட்டாருக்கு
திருமண
விருந்து,
பாத்திரங்கள்
என,
20,000 ரூபாய்
மதிப்பில்
பொருட்களை
வழங்கி,
திருமணம்
செய்து
வைக்கப்படும்.