தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி அக்டோபா் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில், தேனீ இனங்களைக் கண்டுபிடித்து வளா்த்தல், பெட்டிகளில் தேனீ வளா்க்கும் முறை மற்றும் நிா்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிா்கள், மகரந்த சோக்கை மகசூல் அதிகரிக்கும் பயிா்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிா்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் பயிற்சி நாளான்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் துறையில் அடையாளச் சான்று சமா்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ. 590 நேரடியாகச் செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரியிலோ அல்லது 0422-6611214 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.