தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி வகுப்பு – 30 நாட்கள் இலவசப் பயிற்சி
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளா்ப்பு குறித்து 30 நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோா்களை உருவாக்கும் நோக்கில் தேனீக்கள் வளா்ப்பு, தேனீ மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் பற்றிய 30 நாள்கள் இலவசப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.
ஆா்முள்ள விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், சுய உதவிக் குழுவினா் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பெ.பச்சைமாலை தொடா்பு கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் 95788 84432 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow