ஒன்றிய அரசின் தேசிய வள அமைப்பான இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோவை மாவட்டத்தில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சிக்கான தேனீ வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் குறித்த ஒரு மாத கால இலவச பயிற்சி காரமடையில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 9976180670, 9442775263 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.