பி.டி.எஸ்.,
இடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு
நீட்டிப்பு
முதலாமாண்டு பி.டி.எஸ்.,
படிப்பில் அரசு மற்றும்
சுயநிதி இடங்களுக்கு ஆன்–லைனில்
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
வரும் 29ம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார்
மருத்துவ கல்லுாரிகளில் பி.டி.எஸ்.,
இடங்கள் சென்டாக் மூலம்
நிரப்பப்பட்டு வருகிறது.
பி.டி.எஸ்.,
படிப்பிற்கு பல கட்ட
கவுன்சிலிங் இதுவரை நடத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், முதலாமாண்டு சேர்க்கைக்கான இடங்கள்
கூடுதலாக்கப்பட்டுள்ளன. இந்த
இடங்களுக்கு கடந்த 25ம்
தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்
– லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு
வரும் 29ம்தேதி மாலை
6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரசு ஒதுக்கீட்டு இடங்கள்,
சுயநிதி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.மேலும் விபரங்களுக்கு www.centacpuducherry.in
என்ற இணைய முகவரியை
பார்க்கவும்.
அல்லது
0413-2655570, 2655571 என்ற எண்களில் காலை
10 முதல் மாலை 5 மணி
வரை தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.