கோஇந்தியா சார்பில்
பி.காம்., பி.இ.
இளைஞா்களுக்கு திறன்
பயிற்சி
இது தொடா்பாக, கோஇந்தியா தலைவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் வேலை
வாய்ப்பற்ற பி.காம்.,
பி.இ. படித்த
இளைஞா்களுக்கான திறன்
பயிற்சி கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள கோஇந்தியா
பயிற்சி மையத்தில் நடைபெற்று
வருகிறது.
இப்பயிற்சியானது, 2 மாதங்களுக்கு நேரடியாக
வழங்கப்படுகிறது. பயிற்சி
முடித்த அனைவருக்கும் அரசுச்
சான்றிதழுடன் தனியார்
துறையில் வேலைவாய்ப்பு உறுதி
செய்யப்படும்.
18 வயது
முதல் 35 வயதுக்கு உள்பட்ட
வேலை வாய்ப்பற்ற பி.காம்.,
பி.இ. படித்த
இளைஞா்கள் இந்த குறுகியகால திறன் பயிற்சி பெற
விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: கோஇந்தியா பயிற்சி மையம்,
ஆவாரம்பாளையம், கைப்பேசி:
9597555941 என்ற முகவரியில் அணுகலாம்.