இனி அனைத்து சனிக்கிழமைகளும் வங்களுக்கு பொது விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை குறித்த புதிய அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்று கூறுகின்றனர்.