தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
அதன்படி, நாளை, 18ம் தேதியும், நாளை மறுநாள், 19ம் தேதியும் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கரி பொருட்கள் தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
அதன்படி, வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில்,பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 9488518268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.