நாளை மறுதினம்
இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வு–வனத்துறை
அறிவிப்பு
வனத்
துறையில், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்துக்கான எழுத்து
தேர்வு நாளை மறுதினம்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
வனத் துறையில் களம்
மற்றும் நிர்வாக நிலையிலான
பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
வனப் பாதுகாப்பு மற்றும்
மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு
ஆராய்ச்சிகள் வனத்
துறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான
ஆராய்ச்சியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வனத்
துறை முடிவு செய்தது.
இதற்கான எழுத்து தேர்வு,
ஜன., 20ல் நடத்த
திட்டமிடப் பட்டது.
தவிர்க்க
முடியாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் தேர்வு நடத்த
முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இத்தேர்வு நாளை
மறுதினம் நடைபெறும் என
வனத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.