பி.ஆர்க்
படிப்புகளுக்கு 12 ஆம்
வகுப்பில் 50 சதவிகிதம் தேர்ச்சி
தேவையில்லை
நாடு
முழுவதும் உள்ள மத்திய
கல்வி நிறுவங்களில், பி.ஆர்க்
படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை வழங்க 12 ஆம்
வகுப்பில் இயற்பியல், வேதியியல்,
கணிதம் பாட பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான
மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும்
மத்திய அரசு சார்பில்
நடத்தப்படும் நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா
காரணமாக இளநிலை கட்டிடக்கலை படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை மதிப்பெண் தகுதியை
மாற்றியமைக்கப்பட உள்ளதாக
மத்திய கல்வி அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
கொரோனா
காரணமாக நாடு முழுவதும்
பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக
பாடங்களை படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல்
திறன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் 2021 – 2022ஆம்
ஆண்டுக்கான கட்டிடவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மதிப்பெண்
அளவை குறைத்து அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய
அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறுகையில்:
2021-2022ஆம்
கல்வி ஆண்டில் பி.ஆர்க்
படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு 12 ஆம்
வகுப்பில் இயற்பியல், வேதியியல்,
கணிதம் பாடங்களில் தேர்ச்சி
வழங்குவது போதுமானது. கடந்த
ஆண்டை போல 50 சதவிகித
மதிப்பெண் பெற்றிருக்க தேவையில்லை.
கொரோனா
காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. மேலும்
இதில் 10ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள்
டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி
பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.