தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை விண்ணப்பதாரர்களும் நிறுவனங்களும் நேரடியாக சந்திக்கும் ‘வேலைவாய்ப்பு முகாம்’ கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு முகாம் எப்போது?
இந்த மாதத்திற்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
யார் கலந்துகொள்ளலாம்?
முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
: தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.. அரசாங்க வேலை வெயிட்டிங்! திருச்சி மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு
வயது வரம்பு:
இதில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை. 21 வயதில் இருந்து யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும்.
எப்படி பதிவு செய்வது?
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.