4.5 லட்சம் அரசு
ஊழியர்களுக்கு சட்டமன்ற
தேர்தல் பணி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
இந்த ஆண்டு 4.5 அரசு
ஊழியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளதாக
தலைமை தேர்தல் அதிகாரி
தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சி
தலைவர்கள் பிரச்சாரத்தை துவக்கி
உள்ளனர். மேலும் தேர்தல்
ஆணையம் ஏற்பாடுகளை தீவிரமாக
எடுத்து வருகிறது. கொரோனா
பரவலுக்கு மத்தியில் தேர்தல்
நடத்தப்படும் என்பதால்
பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால்
தேர்தல் பணியில் அதிகப்படியான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது குறித்து தலைமை
தேர்தல் அதிகாரி சத்யபிரதா
சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி
வெளியிடப்பட்ட இறுதி
வாக்காளர் பட்டியலில் புதிய
வாக்காளர் சேர்க்கை, முகவரி
மாற்றம் மற்றும் பெயர்
விட்டுப் போனவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தல்
தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர்
தலைமை தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் நேரில் ஆய்வு
செய்வார்.
இம்முறை
தேர்தல் பணிகளில் 4.5 லட்சம்
அரசு ஊழியர்கள் மற்றும்
பாதுகாப்புக்கு ஏராளமான
போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பம்
இருந்தால் நேரில் வந்து
வாக்கு அளிக்கலாம் எனவும்
இல்லையென்றால் தபால்
ஒட்டு மூலம் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.