மார்ச் 10ல்
இளைஞா்களுக்கான கலைப்
போட்டிகள்
பெரம்பலூா் மாவட்டத்தில் கலைப்
பண்பாட்டுத்துறை சார்பில்,
இளைஞா்களுக்கான கலைப்
போட்டிகள் மாவட்ட அரசு
இசைப்பள்ளியில் மார்ச்
10ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட
ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த, 17 முதல்
35 வயதுக்குள்பட்டோருக்கு கலைப்போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி
குரலிசை, கருவியிசை, பரத
நாட்டியம், கிராமிய நடனம்
மற்றும் ஓவியம் ஆகிய
5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான
போட்டிகள் மார்ச் 10ம்
தேதி மதனகோபாலபுரத்தில் உள்ள
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறுகிறது.
குரலிசை,
கருவியிசை, பரத நாட்டியப்
போட்டிகள் காலை 10 மணிக்கும்,
கிராமிய நடனம் மற்றும்
ஓவியம் ஆகிய போட்டிகள்
பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும்.
தனி நபராக அதிகபட்சம் 5 நிமிஷ நிகழ்ச்சி நடத்த
அனுமதிக்கப்படுவார்கள்.
குரலிசைப்
போட்டியிலும், நாகசுரம்,
வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், பேண்டுவாத்தியம், மாண்டலின்,
கிதார், சாக்சபோன், கிளாரிநெட் உள்ளிட்ட கருவி இசைப்
போட்டியிலும், 5 வா்ண
ராக சுரத்துடன் 5 தமிழ்ப்
பாடல்கள் இசைக்கும் தரத்திலுள்ள இளைஞா்கள் பங்கேற்கலாம்.
தாளக்
கருவிகளான தவில், மிருதங்கள், கஞ்சிரா, கடம், மோர்சிங்,
கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சோந்தவா்கள் 5 தாளங்களில் வாசிக்கும் தோச்சிப் பெற்றவா்களாக இருக்க
வேண்டும். பரத நாட்டியத்தில் 3 வா்ணங்கள் மற்றும் 5 தமிழ்ப்
பாடல்கள் நிகழ்த்தும் நிலையில்
உள்ளவா்கள் பங்கேற்கலாம்.
கிராமிய
நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், மரக்கால்
ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை
மக்கள் நடனங்கள் போன்ற
பாரம்பரிய கிராமிய நடனங்கள்
அனுமதிக்கப்படும்.
ஓவியப்
போட்டியில் பங்கேற்பவா்களுக்கான ஓவிய
தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக்
மற்றும் நீா் வண்ணம்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நடுவா்களால் கொடுக்கப்படும் தலைப்பில்
ஓவியங்கள் வரைய வேண்டும்.
அதிகபட்சம் 3 மணி நேரம்
அனுமதிக்கப்படும்.
இப்போட்டியில் முதலிடம் பெறும் இளைஞா்கள்
மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும்
விவரங்களுக்கு இணையதளத்திலும், 7708449321, 9842489148, 994036371 ஆகிய
எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.