வேளாண் சான்றிதழ்,
டிப்ளமோ பாடங்கள் மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு
கோவை
வேளாண் பல்கலை சார்பில்
தொலைதுார ஓராண்டு டிப்ளமோ
மற்றும் ஆறுமாத கால
சான்றிதழ் வேளாண் படிப்புகள் தேவைக்கேற்ப அந்தந்த மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தொலைதுார
கல்வி இயக்கக இயக்குனர்
ஆனந்தன் கூறியதாவது:வேளாண்
இடுபொருள் கடை வைத்திருப்பவர்களுக்கான ஓராண்டு கால
வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு மாணவர்களின் தேவைக்கேற்ப அந்தந்த
மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. மாதத்தில் ஒருநாள் மட்டும்
நேரடி பயிற்சி.இது
தவிர பண்ணைத் தொழில்
நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பம், பண்ணைக் கருவிகள், பராமரிப்பு, வேளாண் கிடங்கில் தரக்கட்டுப்பாடு, மூலிகை அறிவியல், தென்னை
சாகுபடி தொழில்நுட்பம், கரும்பு
தொழில்நுட்பம், அங்கக
வேளாண்மை, வணிக ரீதியில்
உயிரியல் பூச்சி மற்றும்
நோய் கொல்லிகள் உற்பத்தி,
உணவு அறிவியல் மற்றும்
பதப்படுத்துதல், மருந்துவ
பயிர்கள் உற்பத்தி தர
நிர்ணயம், தேயிலை உற்பத்தி
மேலாண்மை போன்ற ஓராண்டு
படிப்புகளும் நடத்தப்படுகின்றன.காளான் வளர்ப்பு,
மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, பழங்கள்
மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துதல், ரொட்டி மற்றும் சாக்லெட்
தயாரித்தல், நர்சரி தொழில்நுட்பம், அலங்காரத் தோட்டம் அமைத்தல்,
மூலிகைப்பயிர்கள், பட்டுப்புழு வளர்ப்பு போன்ற 6 மாத
கால சான்றிதழ் படிப்புக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதம்
ஒருநாள் சனிக்கிழமை அந்தந்த
மாவட்டங்களில் நேரடி
பயிற்சி அளிக்கப்படும். ஆன்லைனில்
விண்ணப்பித்து கட்டணத்தை
ஆன்லைன் வழியாக செலுத்த
வேண்டும் என்றார். கூடுதல்
தகவல்களுக்கு 94890 51046ல்
தொடர்பு கொள்ளலாம்.