செங்கல்பட்டு, ஏப். 14–செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை 21ம் தேதி, நடக்கிறது.கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திகுறிப்பு:தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பயிற்சிப் பிரிவு மற்றும் எம்.எஸ்.எம். தொழிற் நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பழகுனர் பயிற்சி, வரும் 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.இத்தொழிற் பழகுனர் சேர்க்கை முகாமில், ஐ.டி.ஐ., தேர்ச்சி, பெற்றவர்கள் மற்றும் 8, 10, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்; 044- 29894560 தொடர்பு கொள்ளலாம்.