TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் 2400 தற்காலிக செவிலியர்களுக்கு
பணி
நியமனம்?
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில்
மக்கள்
அதிகமானோர்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டதால்
மருத்துவ
பணியாளர்களுக்கான
தேவை
அதிகமாக
இருந்தது.
அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில்
தற்காலிக
மருத்துவ
பணியாளர்கள்
நியமனம்
செய்யப்பட்டனர்.
அவ்வாறு
2400 செவிலியர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு
நேற்றுடன்
பணிக்கான
ஒப்பந்தம்
முடிவடைந்தது.
இதற்கு முன்னதாக ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக அரசு முறையான விதிகளின்படி
ஊழியர்களை
நியமிக்கவில்லை
எனவும்
இதனால்
சிக்கல்
உள்ளதால்
தமிழக
முதல்வருடன்
ஆலோசனை
நடத்தப்பட்டதாக
அரசு
விளக்கம்
அளித்தது.
இந்த நிலையில் 2400 செவிலியர்களின்
வாழ்வாதாரம்
மற்றும்
குடும்ப
நிலை
காரணமாக
அரசு
ஆரம்ப
சுகாதார
நிலையங்களில்
முன்னுரிமை
அடிப்படையில்
தேவைக்கு
ஏற்ப
நியமனம்
செய்யப்படுவார்கள்
எனவும்
இவர்களுக்கு
தேசிய
சுகாதாரப்
பணி
அடிப்படையில்
ஊதியம்
வழங்கப்படும்
எனவும்
சுகாதாரத்துறை
அமைச்சர்
சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.