TAMIL MIXER EDUCATION- ன் தொழில் பற்றிய செய்திகள்
தையல் நிறுவனம்
தொடங்க விண்ணப்பிக்கலாம் – கரூர்
தையல்
நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர்
தகவல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர்
மாவட்டத்தில் தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
மற்றும் இந்திய தொழில்
கூட்டமைப்பு இணைந்து வேலைதேடுவோருக்கும், வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை
ஏற்படுத்தி தரும் திட்டமாக,
‘பாலம் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில்,
வேலை தேடும் பெண்கள்,
தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பணிக்கு செல்லும் பயண
தொலைவு அதிகமாக இருக்கும்
காரணத்தால் பணிக்கு செல்வதில்
சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனை
தவிர்க்கும் பொருட்டு, கரூர்
மாவட்டத்தில், 8 வட்டாரங்களிலும் தையல் தொழில் நிறுவனங்கள் தங்களது துணி உற்பத்தி
அலகை அமைக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான இடமும்,
தேவையான ஆட்களும், மகளிர்
திட்டத்தின் மூலம் ஏற்பாடு
செய்து தரப்படும்.
இது
தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு நகர வாழ்வாதார மையம்
(பாலம் திட்டம்) கரூர்,
மாநகராட்சி அலுவலகம் எதிரில்
அல்லது மாவட்ட கலெக்டர்
அலுவலகம் இரண்டாம் தளத்தில்
அமைந்துள்ள மகளிர் திட்ட
அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.