புதிய தொழிற்பள்ளிகள் துவங்க இந்த இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்!
புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், 0427 2900142 தொலைபேசி எண் மற்றும் rjdtslm@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொண்டும் விபரங்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow