தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
விருப்பமுள்ளவா்கள் சங்க அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கா. சிவஞானம், மாவட்டச் செயலா் ஆா். வைரவன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் முத்துராமலிங்கம் நகரில் உள்ள எம்.ஆா். அப்பன் இல்லத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் அரசுப் போட்டித் தோ்வுக்கான இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பயின்றவா்களில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு அரசுப் பணிகளில் உள்ளனா்.
இந்தப் பயிற்சி வகுப்பில் தோ்ச்சி பெற்ற முன்னாள் மாணவா்கள் தற்போது பயிற்சி வகுப்பின் ஆசிரியா்களாக உள்ளனா். இந்த அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுத் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
எனவே, இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா், சங்க அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 94865 53544, 63740 50289, 94881 67313 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow