TAMIL MIXER EDUCATION-ன் விருது பற்றிய செய்திகள்
சமூக சேவகா்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திரத் தின விழாவில், பெண்களின்
முன்னேற்றத்திற்கு சிறந்த
சேவை புரிந்த சமூக
சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022ம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவகா்
மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை பெற விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள்
இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும்.
மேலும்,
இந்த விருதைப் பெறுவதற்கு, தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட
18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலம்
சார்ந்த நடவடிக்கைகள், பெண்
குலத்திற்கு பெருமை சோக்கும்
வகையிலான நடவடிக்கை, மொழி,
இனம், பண்பாடு, கலை,
அறிவியல், நிர்வாகம் போன்ற
துறைகளில் மேன்மையான முறையில்
மக்களுக்கு தொண்டாற்றும் வகையில்
தொடா்ந்து பணியாற்றிருக்க வேண்டும்.
சமூக
சேவை நிறுவனமானது அரசு
அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக
இருத்தல் வேண்டும். மேற்கண்ட
விதிமுறைகளுக்கு உள்பட்டு,
பெண்களின் முன்னேற்றத்திற்கான தங்கள்
சாதனைகளை உரிய தகவல்களுடன் அளித்து, அதற்கான சான்றுகளை
கையொப்பம் இட்ட நகல்களுடன் இணைத்து கிருஷ்ணகிரி மாவட்ட
சமூக நல அலுவலகத்தில் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த
விருதுக்கு ரொக்கப் பரிசு,
தங்கப்பதக்கம், சான்றிதழ்,
சால்வை வழங்கப்படும். மேலும்,
விவரங்களுக்கு மாவட்ட
ஆட்சியா் அலுவலகம், அறை
எண் 21ல் நேரில்
வந்து தகவல் பெற்றுக் கொள்ளலாம்.