ஊரக அறிவியல்
கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஊரக
அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு 10.06.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தமழக
அரசு தெரிவித்துள்ளது.
அறிவியல் நகரம் 2018-2019 ஆம் ஆண்டு
முதல் தமிழக அரசின் ஊரக
கண்டுப்பிடிப்பாளர் விருதினை,
வழங்கி வருகிறது தமிழக
அரசு.
இவ்விருது
கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள
புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு
சிறந்த ஊரக அறிவியல் கண்டுப்பிடிப்பாளர்களுக்கு தலா ரூ.
1 லட்சம் ரூபாய்க்கான காசோலை
மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இது
சம்பந்தமாக 2020-2021 ஆம்
ஆண்டிற்கான கிராமப்புற கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் மற்றும்
வழிகாட்டுதல்களை, www.sciencecitychennai.in என்ற
அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதுமைக்கு துணைபுரியும் தேவையான
இணைப்புகளுடன் முறையாகப்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.06.2022 அன்று மாலை
5.00 மணிக்குள் அறிவியல் நகர
அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.