HomeBlogவன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் நடைபெறும் - இலவச பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு...
- Advertisment -

வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் நடைபெறும் – இலவச பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for the Free Green Skills Development Training - on behalf of the Forest Genetics and Breeding Institute

வன மரபியல்,
மரப்பெருக்கு நிறுவனம்
சார்பில் நடைபெறும்இலவச
பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இதுதொடர்பாக ஐஎஃப்ஜிடிபி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை
ஆர்.எஸ்.புரத்தில்
உள்ள வன மரபியல்
மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில்,
வரும் நவம்பர் முதல்
2022
ஜனவரி வரை பசுமைத்
திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்படுகிறது.

இதில்,
தரமான நடவு பொருள்
உற்பத்தி பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க 10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 நாட்கள் பயிற்சி
அளிக்கப்படும்.

தாவர
திசு வளர்ப்பு நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க அறிவியல் பட்டப் படிப்பு
முடித்திருக்க வேண்டும்.
40
நாட்கள் பயிற்சி காலமாகும்.
இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி
கடைசிநாளாகும்.

விருப்பமுள்ளவர்கள் www.gsdp-envis.gov.in/Default3.aspx
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அல்லது
https://bit.ly/3mrimKG
என்ற
இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை ifgtb@envis.nic.in என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

விண்ணப்பத்தை நிரப்புவதில் சிரமம்
உள்ளவர்கள் மூத்த திட்ட
அலுவலர் விக்னேஸ்வரனை 9952645333,
9944328696
என்ற எண்களில் திங்கள்
முதல் வெள்ளி வரை
காலை 9 மணி முதல்
மாலை 5.30 மணி வரை
தொடர்புகொள்ளலாம்.

தங்குமிடம், உணவு, பயிற்சி கிட்
ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு மத்திய அரசின்
சுற்றுச்சூழல் மற்றும்
பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சான்று வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -