TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மின்சாரத்தால்
இயங்கும்
புல்நறுக்கும்
கருவிகளை
மானிய
விலையில்
பெற
விண்ணப்பிக்கலாம்
மின்சாரத்தால்
இயங்கும்
புல்நறுக்கும்
கருவிகளை
50 சதவீத
மானிய
விலையில்
பெற
விவசாயிகள்
வரும்
20ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில்
கால்நடைகளுக்கு
தீவனப்
பற்றாக்குறையைப்
போக்கவும்,
பசுந்தீவன
உற்பத்தியைப்
பெருக்கவும்
ஒவ்வொரு
ஆண்டும்
மானியத்துடன்
கூடிய
பல்வேறு
திட்டங்களை
கால்நடை
பராமரிப்புத்
துறை
செயல்படுத்தி
வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில்
தீவன
அபிவிருத்தி
திட்டத்தில்
விவசாயிகளுக்கு
மொத்தம்
150 எண்ணிக்கையில்
50 சதவீத
மானியத்தில்
மின்சாரத்தால்
இயங்கும்
புல்
நறுக்கும்
கருவிகள்
வழங்கும்
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.
இத்திட்டத்தின்
கீழ்
வழங்கப்படும்
புல்
நறுக்கும்
கருவிகள்
மூலம்
நறுக்கப்பட்ட
பசுந்தீவனத்தால்
தீவன
விரயத்தை
குறைத்து,
கால்நடைகளுக்கு
செரிமானத்தை
மேம்படுத்தி,
பால்
உற்பத்தியைப்
பெருக்க
முடியும்.
இதன்
மூலம்
விவசாயிகளின்
பொருளாதாரம்
மேம்படுத்தப்படும்.
இத்திட்டத்தில்
விண்ணப்பிக்க
விரும்புவோர்
குறைந்தது
இரண்டு
பசு
அல்லது
எருமை
அல்லது
20 ஆடுகள்
வைத்திருக்க
வேண்டும்.
அரை
ஏக்கா்
பரப்பில்
தீவன
சாகுபடி
செய்பவராக
இருக்க
வேண்டும்.
இதுபோன்ற அரசு திட்டங்களில்
கடந்த
10 ஆண்டுகளில்
பயன்பெறாதவராக
இருக்க
வேண்டும்.
கருவியின்
விலையில்
50 சதவீதத்தை
செலுத்துவதற்கு
விருப்பமுள்ளவராக
இருக்க
வேண்டும்.
இத்திட்டத்தில்
சிறு,
குறு
விவசாயிகள்,
பெண்
விவசாயிகள்
மற்றும்
தாழ்த்தப்பட்ட
பழங்குடியின
வகுப்பைச்
சேர்ந்த
விவசாயிகளுக்கு
தகுதியின்
அடிப்படையில்
முன்னுரிமை
வழங்கப்படும்.
இத்திட்டத்தின்
மூலம்
பயன்பெற
விருப்பமுள்ள
கால்நடை
வளா்ப்பில்
ஈடுபட்டுள்ள
விவசாயிகள்
வரும்
2ம்
தேதிக்குள்
கிராமத்துக்கு
உள்பட்ட
கால்நடை
மருந்தக
கால்நடை
உதவி
மருத்துவரை
அணுகி
திட்ட
விளக்கங்களை
பெற்று,
உரிய
படிவத்தில்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
9445032515
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.