HomeBlogகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - புதுக்கோட்டை
- Advertisment -

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – புதுக்கோட்டை

Apply for Scholarship - Pudukottai

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், செயல்படுத்தப்பட்டு வரும்
கல்வி உதவித்தொகை 2021-2022ம்
கல்வியாண்டிற்கான மத்திய
அரசு நிதி ஆதரவிலான
போஸ்ட் மெட்ரிக் (10ம்
வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து
படிப்புகளும்) கல்வி
உதவித்தொகை திட்டம் மற்றும்
ப்ரிமெட்ரிக் (ஒன்பது
மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டம்
ஆகிய திட்டங்களுக்குரிய கல்வி
இணையதள வழி in); 13.12.2021 அன்று
திறக்கப்பட்டுள்ளது.

மேற்படி
திட்டங்களின் கீழ்
பயன்பெற தகுதி வாய்ந்த
ஆதிதிராவிடர், கிருத்துவ
மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை 05.01.2022க்குள்
உரிய முறையில் பூர்த்தி
செய்து விடுதி சார்பான
விவரங்கள், சேமிப்பு கணக்கு
விவரங்கள் மற்றும் ஆதார்
விவரங்கள் சரியாக உள்ளதா
என்பதை கல்வி நிறுவனங்கள் கூர்ந்தாய்வு செய்து
மாற்றங்கள் ஏதுமிருப்பின் அதனை
சரிசெய்து கொண்டு இணையவழியில் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்
பழங்குடியினர் நல
மாணாக்கர்களிடமிருந்து புதிய
மற்றும் புதுப்பித்தல் கல்வி
உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய
முறையில் பூர்த்தி செய்து
சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு
கணக்கு புத்தக நகல்
மற்றும் ஆதார் எண்
உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் 13.1.2022 விண்ணப்பிக்கவும், மேலும்
குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது
விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

எனவே
கல்வி நிறுவனங்கள், பள்ளிகள்
மாணாக்கர்களுக்குரிய கல்வி
உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி
செய்திடவும், மாணாக்கர்கள் சார்பான
விண்ணப்பங்களை எவ்வித
தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -