மின்மோட்டாருடன் இலவச
தையல் இயந்திரம் பெற
விண்ணப்பிக்கலாம் – தஞ்சை
தஞ்சை
மாவட்டத்தில் உள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல
அலுவலகத்தின் மூலம்
மின்மோட்டாருடன் கூடிய
இலவச தையல் இயந்திரம்
சிறுபான்மையினருக்கு வழங்கப்பட
உள்ளது.
இதற்கு
தகுதிகளாக, தையல் கலை
பயின்றவராக இருக்க வேண்டும்.
அதற்கான உரிய சான்றிதழை
சமர்பிக்க வேண்டும். ஆண்டு
வருமான உச்சவரம்பு ரூ.1
லட்சம் ஆகும்.
வயது
20 முதல் 45 வயதிற்குள் இருக்க
வேண்டும். கைம்பெண் மற்றும்
கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருமுறை
தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம்
பெற 7 ஆண்டுகள் கடந்த
பின்னரே தகுதிய உடையவராக
கருதப்படுவர்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல
அலுவலரிடமிருந்து உரிய
விண்ணப்பங்கள் பெற்று
விண்ணப்பிக்க மாவட்ட
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்
ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.