TAMIL
MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
சென்னை ஐஐடியின் நிர்வாக எம்.பி.ஏ பட்டப்படிப்புக்கு
விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியில் பணிபுரியும் வல்லுநர்களுக்கான
பணியிடைக்காலப்
படிப்பாக
பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்டு
உள்ள
நிர்வாக
எம்.பி.ஏ. பட்டப்படிப்புத்
திட்டத்திற்கு
அக்டோபர்
10ம்
தேதி
வரையில்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய
நிறுவனத்
தரவரிசை
பட்டியலில்,
முதல்
10 வணிகப்
பள்ளிகளில்
இடம்பெற்றுள்ள
சென்னை
ஐஐடியின்
மேலாண்மைக்
கல்வித்
துறை
வழங்கும்
இந்த
இரண்டாண்டு
பாடத்
திட்டம்
கடுமையானது
மட்டுமின்றி
நடைமுறை
சார்ந்ததாகும்.
சென்னை ஐஐடியின் நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்பு
அக்டோபர்
10ஆம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய நிலைப்பாடு, தொழில்துறை 4.0 தொழில்நுட்பம்
போன்ற
களங்களில்
தொழில்துறைக்குத்
தேவையான
அதிநவீன
அறிவை
வழங்குவதுதான்
நிர்வாக
எம்பிஏ
பாடத்திட்டத்தின்
நோக்கமாகும்.
எந்தவொரு
சமகால
வணிகம்,
பொருளாதாரத்
தளம்,
உலகளாவிய
வணிக
மேலாண்மை
போன்றவற்றுக்கும்
அவசியமான
சமூக
ஊடகங்கள்
மற்றும்
இணைய
சந்தைப்படுத்தலை
இந்தப்
பாடத்திட்டம்
தெளிவாக
விளக்குகிறது.
இணையப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள், வணிக மாதிரிகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள்
உள்ளிட்ட
இதர
முக்கியமான
பாடங்களும்
இதில்
இடம்பெற்றுள்ளன.
நவீன
உற்பத்தி
நடைமுறைகள்,
3டி
பிரிண்டிங்
உள்பட
தொழில்நுட்ப
அம்சங்களையும்
மாணவர்கள்
தெளிவாக
அறிந்துகொள்ள
முடியும்.
இந்த
பாடத்திட்டத்தில்
சேர
அக்டோபர்
10ஆம்
தேதி
வரையில்
ஆன்லைன்
மூலம்
https://doms.iitm.ac.in/emba/ என்ற இணைய முகவரியில் விண்ணபிக்கலாம்.
சென்னை ஐஐடியின் நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்பு
அக்டோபர்
10ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
நிர்வாக எம்பிஏ திட்டம் ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவர் கூறும்போது:
இத்துறையால் நடத்தப்படும்
நிர்வாக
எம்பிஏ
பாடத்
திட்டம்
தொடர்ந்து
தொழில்துறையின்
பேராதரவைப்
பெற்று
வருகிறது.
மாணவர்கள்
வெவ்வேறு
துறைகளைச்
சார்ந்தும்,
சராசரியாக
11 வருட
அனுபவத்துடனும்
படிக்க
வருகின்றனர்.
இந்தத்
துறையின்
அதிநவீன
ஆராய்ச்சி,
அனுபவக்
கற்றல்
போன்றவற்றை
பயன்படுத்திக்
கொள்ள
முடியும்
எனத்
தெரிவித்தார்.
பணிபுரியும் வல்லுநர்களை பணியிடைக் காலத்தில் ஈடுபடுத்தும்
பாடத்திட்டத்தின்
மூலம்,
ஆழ்ந்த
செயல்பாடு
மற்றும்
பரந்த
தொழில்துறை
கள
அறிவு,
வெவ்வேறு
சூழலில்
எடுக்கப்படும்
வணிக
முடிவுகளின்
ஒருங்கிணைந்த
தொலைநோக்கு,
உலகளாவிய
வணிக
அமைப்பில்
பங்களிப்பை
வழங்க
தலைமைப்
பண்புகள்,
வார
இறுதி
நாட்களில்
கல்விபயிலும்
வகையில்
(நேரடியாகவும்,
ஆன்லைனிலும்)
இத்திட்டம்
வடிவமைக்கப்பட்டு
உள்ளது.
ஜனவரி
2023ல்
வகுப்புகள்
தொடங்கப்பட்டு,
ஒருவாரம்
விட்டு
மறுவாரம்
என
வாரஇறுதி
நாட்களில்
நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கான
தகுதி,
முதல்வகுப்பு
மதிப்பெண்களுடன்
ஏதேனும்
ஒரு
பிரிவில்
இளங்கலைப்
பட்டம்
மற்றும்
குறைந்த
பட்சம்
3 ஆண்டுகள்
தொழில்துறை
அனுபவம்.
சென்னை
ஐஐடி
மேலாண்மைக்
கல்வித்
துறையால்
நுழைவுத்
தேர்வும்,
தனிப்பட்ட
நேர்காணலும்
நடத்தப்பட்டு
மாணவர்
சேர்க்கை
நடைபெறும்.