TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம் செய்திகள்
கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் முழுநேர
கூட்டுறவு மேலாண்மை, கணினி
மேலாண்மை, நகை மதிப்பீட்டாளா் பயிற்சி ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான மாணவா்
சோக்கை நடைபெறுகிறது. பயிற்சிக்
காலம் 12 மாதங்கள்.
பயிற்சிக்
கட்டணம் பின்னா் தெரிவிக்கப்படும். பிளஸ் 2 தோச்சி
பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். விண்ணப்பத்தை கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் ரூ.100
ரொக்கமாக நேரில் செலுத்தி
பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தப்
பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28 ம் தேதி
கடைசி நாளாகும்.
நிறைவு
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேலாண்மை
நிலையத்துக்கு வரும்
ஆகஸ்ட் 1ம் தேதி
மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா
கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
எண். 6, வந்தவாசி சாலை,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்
எதிர்ப்புறம், காஞ்சிபுரம் – 631 501 என்ற
முகவரியிலோ அல்லது 044 27237699
என்ற தொலைபேசி எண்ணிலோ
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here